சாலையில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது டெம்போ வாகனம் மோதிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஹெலிகாப்டர் ஒன்று சாலையில் நடுவில் உள்ள ரவுண்டா பகுதியின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது அதன் இறக்கைகள் புறப்படுவதற்காக சுத்திக்கொண்டிருந்தது.

Advertisment
Advertisment

இந்நிலையில், அந்த வழியாக வந்த டெம்போ வாகனம் ஒன்று ஹெலிகாப்டரின் இறக்கை மீது மோதியது. இதில் அந்த வாகனம் தூக்கி வீசப்பட்டது. ஹெலிகாப்டரின் இறக்கை முற்றிலும் சேதமடைந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.