விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!

Helicopter in an accident in pune

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மும்பையில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில், கேப்டன் உள்பட 4 பேர் பயணித்து வந்தனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தின் பாட் கிராமம் அருகே ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கேப்டனின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பினர். விபத்தில் காயமடைந்த கேப்டனை மீட்டு சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 3 பேரின் உடல் நிலை சீராக உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

helicopter Pune
இதையும் படியுங்கள்
Subscribe