Advertisment

இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை - அவரசகால நிவாரண முகாம்களை அமைக்கும் கேரளா!

kerala cm pinarayi vijayan

கேரளாவில் கடந்த அக்டோபர் மாதம் கொட்டி தீர்த்த கனமழையால், அம்மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. சில இடங்களில் நிலச்சரிவும், ஏற்பட்டது. இதுபோன்ற மழை தொடர்பான நிகழ்வுகளால்42 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில்வடகிழக்கு பருவமழை காரணமாக கேரளாவில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

Advertisment

இந்திய வானிலை ஆய்வு மையம், வரும் 16 ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. மேலும் கேரளாவின்திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், எர்ணாகுளம் மாவட்டத்திற்கு நாளையும்,பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்குஇன்றும், நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனையடுத்துஇந்த மழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை கேரளா அரசு தொடங்கியுள்ளது. இந்தநிலையில்கேரள முதல்வர் பினராயி விஜயன், வெள்ளம் மற்றும் நிலசரிவுஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் அவசரகால நிவாரண முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

monsoon northeast Pinarayi vijayan Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe