Advertisment

டெல்லியில் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Heavy rains in Delhi; Damage to normal life

டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

Advertisment

தலைநகர் டெல்லியில் இன்று (26.07.2024) அதிகாலை கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகபொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் சுரங்கப்பாதைகளில் வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

Advertisment

போக்குவரத்து பாதிப்பு தொடர்பான விவரங்களைப் போக்குவரத்துபோலீசார்சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தெரிவித்து வருகின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படிஇக்னோபகுதியில் நேற்று (25.07.2024) காலை 08.30 முதல் இன்று காலை 06.30 மணி வரை 34.5 மி.மீ மழையும், டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 89.5 மி.மீ மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Delhi traffic
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe