Advertisment

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! 

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 88.3 மி.மீ மழை பெய்துள்ளது.இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

heavy rain issue puducherry private and govt schools holiday announced

மேலும் குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, அரியலூர், கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத் தீவுப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், குமரி கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையின் காரணமாக புதுச்சேரியில் இன்று (31/10/2019) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Advertisment
ANNOUNCED holiday schools private and govt heavy rain Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe