Skip to main content

உபி கனமழையால் 44பேர் பலி...

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
up


உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் சுமார் 16 பேர் பலியாகியுள்ளனர். 
 

இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளதாகவும், 18 பேர் படுகாயம் அடைந்துள்ளாதகவும் தெரிவித்துள்ளனர். பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரிலுள்ள கங்கை ஆற்றில் அபாயகட்டை அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் அரங்கேறிய கொடூரம்; மாணவனைத் தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த கும்பல்!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

gang beaten a class 12 student and urinated on his face

 

12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்கி அவரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள மருத்துவ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக அடித்து தாக்கியுள்ளது. மேலும் அந்த கும்பல் அந்த மாணவனின் முகத்தில் சிறுநீரையும் கழிக்கிறது. அந்த மாணவர் தன்னை விட்டுவிடுங்கள் என்று மன்றாடியும் அவர்கள் தொடர்ந்து தாக்குகின்றனர். இதனை நால்வரில் இரண்டு பேர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கின்றனர். 

 

இந்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து மீரட் போலீசார் கூறுகையில், மாணவனை மர்ம கும்பல் தாக்கும் சம்பவம், கடந்த நவம்பர் 12 ஆம் தேதி  நடந்தது என்றும், அதில் சம்பந்தப்பட்ட அவி சர்மா, ஆஷிஷ் மாலிக், ராஜன் மற்றும் மோஹித் தாக்கூர் ஆகிய நான்கு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அதில் ஆஷிஷ் மாலிக் என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அண்மையில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் தாக்கப்பட்டு முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; ஆஸ்கர் விருது பெற்ற சிறுமியின் வீடு இடிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Oscar winner Pinki house demolished

 

உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்கர் விருது பெற்ற சிறுமி பிங்கியின் வீடு இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப்பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தில், ராம்பூர் தாபி கிராமத்தில் வசித்து வந்தவர் சிறுமி பிங்கி குமாரி சோன்கர். இவருக்கு உதட்டில் பிளவு(Cleft lip) இருந்துள்ளது. அதற்கான சிகிச்சையை சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சிறுமிக்கு சரிசெய்து கொண்டார். இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்மைல் பிங்கி’ என்ற குறும்படம் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்(குறும்) படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை பிங்கியின் கிராமத்தின் பக்கம் திரும்பியது. 

 

அந்த சமயத்தில் மிர்சாபூர் மாவட்ட நிர்வாக சார்பில் வீடு கட்டிக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டு பிங்கியின் குடும்பத்தினர் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி பிங்கியின் வீட்டோடு சேர்த்து அந்த கிராமத்தில் உள்ள 30 வீடுகளையும் காலி செய்யுமாறு அறிக்கை வெளியிட்டனர். 

 

இது குறித்து பிங்கியின் தந்தை ராஜேந்திர சோன்கர்  கூறுகையில், “நாங்கள் வீடு கட்டும் பொழுது இந்த நிலம் வனத்துறையினருக்கு சொந்தமானது எனக் கூறவில்லை. அந்த கிராமத்தில் 70 வது வருடங்களாக எந்த தடையும் இன்றி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்” என்றார். அவரது வழக்கறிஞர் பேசுகையில், “வனத்துறையினர் தான் பிங்கியின் வீட்டிற்கு அடிக்கல்லை நாட்டினர். ஆனால் இன்று அவர்களே இதனை ஆக்கிரமிப்பு என சொல்கின்றனர்” என்றார். “இந்த விவகாரத்தில் யாருக்கும் பிரச்சனை ஏற்படாமல் நியாயமான முறையில் தீர்க்கப்படும்” என மிர்சாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரியங்கா நிரஞ்சன்  தெரிவித்திருக்கிறார்.