Advertisment

சட்டசபை கூட்டத்துக்கு சென்ற போது சபாநாயகருக்கு நெஞ்சுவலி! புதுச்சேரியில் பரபரப்பு!

Heartache for the Speaker when he went to the Assembly meeting

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் திருக்குறளுடன் உரையைத் தொடங்கிய ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், பல்வேறு திருக்குறள்களை மேற்கோள்காட்டிப் பேசினார். புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4வது நாளாக நேற்று காலை கூட்டத்தில் கலந்துகொள்ள சபாநாயகர் செல்வம் சட்டசபைக்கு காரில் வந்தார்.

Advertisment

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரது பாதுகாப்பு அதிகாரி, செல்வத்தை புதுவை அரசு மருத்துவமனைக்கு அந்த காரிலேயே அழைத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த தகவல் அறிந்த ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சபாநாயகர் செல்வத்தை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் பகல் 11.30 மணியளவில் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டார்.

Advertisment

rangasamy Pondicherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe