Skip to main content

உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 805 கோடி நிதி ஒதுக்கீடு!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Health - Rs 805 crore financial allocation for Tamil Nadu!

15- வது நிதிக்குழு பரிந்துரைப்படி நகர்ப்புறம், கிராமப் புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களுக்கு ரூபாய் 8,453.92 கோடியை மத்திய நிதியமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

 

தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் திட்டங்களுக்காக 805.92 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு  ஒதுக்கி உள்ளது.

Health - Rs 805 crore financial allocation for Tamil Nadu!

 

அதன்படி, ஆந்திர பிரதேசம்- ரூபாய் 488.15 கோடி, அருணாச்சலப் பிரதேசம்- ரூபாய் 46.94 கோடி, அசாம்- ரூபாய் 272.25 கோடி, பீகார்- ரூபாய் 1116.30 கோடி, சத்தீஸ்கர்- ரூபாய் 338.79 கோடி, ஹிமாச்சல் பிரதேசம்- ரூபாய் 98.00 கோடி, ஜார்க்கண்ட்- ரூபாய் 444.39 கோடி, கர்நாடகா- ரூபாய் 551.53 கோடி, மத்திய பிரதேசம்- ரூபாய் 922.79 கோடி, மகாராஷ்டிரா- ரூபாய் 778.00 கோடி, மணிப்பூர்- ரூபாய் 42.87 கோடி, மிசோரம்- ரூபாய் 31.19 கோடி, ஒடிசா- ரூபாய் 461.76 கோடி, பஞ்சாப்- ரூபாய் 399.65 கோடி, ராஜஸ்தான்- ரூபாய் 656.17 கோடி, சிக்கிம்- ரூபாய் 20.97 கோடி, தமிழ்நாடு- ரூபாய் 805.92 கோடி, உத்தரகாண்ட்- ரூபாய் 150.09 கோடி, மேற்கு வங்கம்- ரூபாய் 828.06 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கேரளாவின் மோசமான நிதி  நிர்வாகமே காரணம்' - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு 

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Central government alleges in Supreme Court on Kerala's poor financial management is the reason

மாநிலங்கள் வாங்கக் கூடிய கடன் தொகைக்கு மத்திய அரசு உச்சவரம்பு விதித்துள்ளதாக கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, ‘கடன் வாங்கும் வரம்புகளை மத்திய அரசு குறைப்பது என்பது மாநிலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மேலும், நீண்ட கால பொருளாதாரத்தில் சேதத்தை ஏற்படுத்தும். இது குறுகிய காலத்திலோ அல்லது நடுத்தர காலத்திலோ கூட சரிசெய்ய முடியாததாக இருக்கும். கேரள மாநிலத்தில் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசுக்கு உடனடியாக சுமார் ரூ.26,000 கோடி தேவைப்படுகிறது. இந்த நிலையில், மாநில அரசு கடன் திரட்ட மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. 

அரசியலமைப்பு சட்டம், மாநிலங்களுக்கு நிதி சுயாட்சியை வழங்கியிருக்கிறது. சுதந்திரம் அடைந்த பின்னர், இத்தனை ஆண்டுகளாக மாநிலங்கள் தங்கள் பட்ஜெட்டை தயாரித்து நிர்வகிப்பதற்கு இந்த அதிகாரங்களைத் தான் பயன்படுத்தி வருகின்றன. பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதற்கும், நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மாநிலத்தின் கடனை தீர்மானிப்பதற்கும் மாநிலங்களுக்கு உட்பட்டது. மேலும், தேவையான அளவிற்கு மாநிலம் கடன் வாங்காவிட்டால், குறிப்பிட்ட நிதியாண்டிற்கான மாநிலத் திட்டங்களை மாநிலத்தால் முடிக்க முடியாது.

Central government alleges in Supreme Court on Kerala's poor financial management is the reason

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகம், கேரளா மீது நிகரக் கடன் வாங்கும் உச்சவரம்பை விதித்துள்ளது. இதன் மூலம், பொது சந்தையில் கடன் திரட்டுவது உள்பட அனைத்து வழிகளில் இருந்தும் கடன் திரட்டுவதை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தனது நிதி விவகாரங்களை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு இருக்கின்ற அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது' என்று தெரிவிக்கப்பட்டது.  

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விசுவநாதன் அமர்வு முன் வந்தது. அப்போது, இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் (05-02-24) அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'கேரளா மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு அந்த அரசின் மோசமான நிதி நிர்வாகமே காரணம். இந்த நிலையில் தான், கேரளா அரசு சார்பில் கடன் வாங்கும் வரம்புகளை அதிகரிக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருக்கிறது. கேரளா அரசு, மாநில அரசின் உற்பத்தி திட்டங்கள், நலத்திட்டங்களுக்காக கடன் வாங்கவில்லை. மணிலா அரசு ஊழியர்களின் ஊதியம், பென்ஷன், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கு கடன் வாங்க முயற்சிக்கிறது.

இதனையடுத்து, கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், மத்திய அரசு, கேரளா ஆளுநர் கண்டித்து நாளை (08-02-24) டெல்லியில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயனின் இந்த போராட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பி.எம். கேர் நிதி குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

rahul gandhi question asked for pm care fund related issue

 

கொரோனா பெருந்தொற்று  இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக  இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதன் காரணமாக அதனை சரி செய்யும் வகையில் பி.எம். கேர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் கீழ் கொரோனா நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும் நிலையில்  பி.எம் கேர் என்று தனியாக ஒன்று எதற்காக என்று ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுமட்டுமின்றி பி.எம் கேர் செயல்படும் முறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது முகநூல் பதிவில், "பிஎம் கேர்ஸ் திட்டத்திற்கு தேவையான நிதி பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து கிடைக்கப் பெறுகிறது. அதற்கான செலவுகள் குறித்து மத்திய அரசு எந்த கணக்கும் தருவதில்லை. அதில் இருந்து எவ்வளவு தொகை முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் நிதி நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் எங்கே செல்கிறது? இது வரி செலுத்துவோரின் பணம்.

 

அரசு நிறுவனங்கள் மூலம் பிஎம் கேர்ஸ் க்கு இதுவரை 2,900 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. இதில் 1,500 கோடி ரூபாயானது ஓஎன்ஜிசி (370 கோடி) , என்பிடிசி (330 கோடி), பிஜிசிஐ (275 கோடி), ஐஓசிஎல் (265 கோடி) மற்றும் பவர் பைனான்ஸ் கமிஷன் (222 கோடி) என 5 முக்கிய நிறுவனங்களிடம் இருந்து கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் யாருடைய வாழ்க்கையை மேம்படுத்த எவ்வளவு நிதி உதவி வழங்கப்பட்டது என்பது குறித்த கணக்கு யாருக்கும் தெரியாது. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே செல்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளார்.