இந்தியாவில்கரோனாவிலிருந்து குணமடைந்தோர்விகிதம்50% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரம், தமிழகம்,டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களும்கரோனா பாதிப்பில்முன்னிலை வகித்து வரும் நிலையில்டெல்லியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில்கரோனாவிலிருந்து குணமடைந்தோர்எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இருந்து 8,049 குணமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.