/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/whats3232.jpg)
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த வாரம் 11,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்த நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்தியத்தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய அபிஜித் போஸ் பதவியை ராஜினாமா செய்ததாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேபோல், மெட்டாவின் இந்தியாவுக்கான பொதுக் கொள்கை இயக்குநர் ராஜிவ் அகர்வால் பதவி விலகி உள்ளார். மெட்டா நிறுவனப் பணிநீக்கத்தின் நீட்சியாகஇந்தியத்தலைமை அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். முன்னதாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு மெட்டா நிறுவனத்தின் இந்தியத்தலைமை அதிகாரி அஜித் மோகன் பதவியிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)