பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வாகனத்தின் ஒரு பகுதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மக்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர்வரை பயணித்ததாகக் கூறப்படுகிறது. பிரதான சாலையில் வந்து கொண்டிருந்த அந்த வாகனம், வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது அதிக எடை காரணமாக வாகனம் தடுமாறிய நிலையில், திடீரென ஆட்கள் அமர்ந்திருந்த பகுதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, வாகனத்தில் அமர்ந்திருந்த அனைவரும் சரிந்து விழுந்தனர்.
நல்வாய்ப்பாக பயணித்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். அந்த நேரத்தில் வாகனம் ஏதும் பின்னால் வராத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.