Advertisment

'ஒரு நாள் கூட லஞ்சம் வாங்காமல் வீட்டுக்கு வரமாட்டார்'-வீடியோ வெளியிட்டு சிக்க வைத்த கணவன்

'He won't come home even for a day without taking a bribe' - the husband who got caught after posting the video

நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வந்த தன்னுடைய மனைவி லஞ்சம் வாங்கியதை கணவரேபோட்டுக் கொடுத்த சம்பவம் தெலுங்கானவில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

தெலுங்கானா மாநிலம் மணிகொண்டா நகராட்சியில் திவ்யா ஜோதி என்பவர் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீபத்-திவ்யா ஜோதி தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நகராட்சியில் பணிபுரியும் திவ்யா ஜோதி லஞ்சம் வாங்குவதை தெரிந்து கொண்ட கணவர் அதை எச்சரித்துள்ளார்.

Advertisment

'He won't come home even for a day without taking a bribe' - the husband who got caught after posting the video

பலமுறை எச்சரித்தும் அதை மனைவி கேட்க மறுத்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவன், மனைவி லட்ச லட்சமாக லஞ்சப் பணத்தை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் லஞ்ச பணத்தை என்னுடைய மனைவி பதுக்கி வைத்திருப்பதாக லைவ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். பீரோ, அலமாரி, பூஜை அறையில் சாமி படங்களுக்கு பின்னால், ஷூ ஸ்டாண்ட், வேஸ்ட் பேக் என வீட்டில் எல்லா இடத்திலும் லஞ்சம் நிறைந்துள்ளது கணவராலே அம்பலப்படுத்தப்பட்டது. அந்த வீடியோ வாயிலாக மொத்தமாக 80 லட்சம் ரூபாயை தனது மனைவி மறைத்து வைத்திருப்பதாக கணவர் போட்டுக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட நகராட்சி பெண் அதிகாரியான திவ்யா ஜோதியிடம் விசாரணைநடைபெற்று வருகிறது.

Bribe incident Investigation police telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe