Skip to main content

“அவர் நேருவின் கொள்ளுப் பேரன்; நான் காந்தியின் கொள்ளுப் பேரன்” - கமல்ஹாசன் பேச்சு

 

 'He was Nehru's great-grandson; I am Gandhi's great-grandson' - Kamal Haasan speech

 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைக் கடந்து தற்போது டெல்லி வந்தடைந்துள்ளது. டெல்லியில் இருக்கும் ராகுல் காந்தி அங்கிருந்து உத்தரப் பிரதேசம் செல்கிறார். இந்நிலையில் இந்தப் பயணத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.

 

 'He was Nehru's great-grandson; I am Gandhi's great-grandson' - Kamal Haasan speech

 

இந்தப் பேரணியில் மக்கள் நீதி மையத்தின் கட்சித் தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசுகையில், ''தமிழில் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது இரண்டு கொள்ளுப் பேரன்கள் சேர்ந்து நடத்தும் யாத்திரை. ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப் பேரன்; நான் காந்தியின் கொள்ளுப் பேரன். மாற்று கொள்கையில் இருந்தாலும் தேச ஒற்றுமைக்காக யாத்திரையில் பங்கேற்றுள்ளேன். எந்த ஒரு நெருக்கடி நமது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். எந்தக் கட்சி ஆள்கிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். நான் முதலில் ஆங்கிலத்தில்தான் பேசுவதாக இருந்தேன். ஆனால் சகோதரர் கேட்டுக்கொண்டதால் தமிழிலும் பேசுகிறேன். நான் இங்கு வருவதற்கு முன்னால் பல பேர் என்னை நீங்கள் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதால் இந்த யாத்திரையில் கலந்துகொள்ளக் கூடாது, அது உங்களுடைய அரசியல் வாழ்க்கையைப் பாழ்படுத்தும் என்று அறிவுரை வழங்கினர். என்னுடைய அரசியல் வாழ்க்கை என்பது என்னுடைய நாட்டுக்குரியது எனக்கானது அல்ல'' என்றார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !