ராஜஸ்தான் தேர்தலை முன்னிட்டு போக்ரானில் இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து இன்று ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசுகையில், ”மோடி பிரதமராவதற்கு முன்புவரை இந்தியா உறங்கிக் கொண்டிருந்ததாக கூறுகிறார். இதன் மூலம் இந்தியாவை மேம்படுத்த உதவியாக இருந்த இந்தியர்கள் அனைவரையும் அவர் அவமதித்து விட்டார்” என்றார்.
இதனை அடுத்து மேலும் பேசிய ராகுல், ”முன்பெல்லாம் மோடி ஜி, 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு நியாயமான குறைந்தபட்ச விலை மற்றும் ஊழலை எதிர்த்து பேசுவார். ஆனால் தற்போதைய நாட்களில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் மற்றும் பிரச்சனைகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று கூறியுள்ளார்.