kumarasamy

கர்நாடகாவில் காங்கிரஸ் தலையீடு தினந்தோறும் அதிகரிப்பதால், தான் ஒரு முதல்வராக செயல்பட முடியவில்லை என்றும், ஒரு குமாஸ்தாவைப் போலத்தான் வேலை செய்கிறேன் என்றும் சொந்தக் கட்சி எம்எல்ஏ, எம்எல்சிக்களிடம் புலம்பினார் முதல்வர் குமாரசாமி.

Advertisment

தன்னை ஒரு உதவியாளாகத்தான் காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள். அதனால் தினமும் ஏகப்பட்ட அழுத்தத்தில் வேலை செய்கிறேன். தங்களுக்கு சாதகமானவற்றையே செய்யும்படி காங்கிரஸ் தலைவர்கள் தன்னை வற்புறுத்துவதாகவும், தனக்கு வேறு வழியில்லாமல் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டியிருப்பதாகவும் கூறினார்.

Advertisment

அவர் வருத்தமாக காணப்பட்டார் என்றும், அழும் நிலையில் தங்களிடம் பேசினார் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் சிலர் கூறினார்கள்.