ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணையதள சேவையில் குளறுபடி

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை கடந்த 5 நாட்களாக முடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். கடந்த 2 ஆம் தேதி முதல் நெட் பேங்கிங் சேவை செயல்படாததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கும் உள்ளாகி இருந்தனர்.

பின்னர் கடந்த 4 ஆம் தேதி சேவை சரியான போது பரிவர்த்தனைகளை சரிவர செய்ய முடியவில்லை என மீண்டும் புகார் அளித்து வருகின்றனர். சமூக வலைத்தளமான டிவிட்டரில் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து ஹெச்.டி.எஃப்.சி வங்கி தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் ஹெச்.டி.எஃப்.சி-க்கு வாடிக்கையாளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

hdfc bank
இதையும் படியுங்கள்
Subscribe