வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபர் வழங்கிய "HDFC" வங்கி!

இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் முதன்மையான வங்கியாக திகழ்ந்து வரும் ஹெச்டிஎப்சி வங்கி (HDFC BANK) தனது 25-வது ஆண்டை நிறைவடைவதை அடுத்து தனது வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. அதன் படி (Book My Show, Zomato, Inox Movies, Bigbasket) உள்ளிட்ட இந்த நான்கு வகைகளைப் பயன்படுத்தி கொண்டு ஹெச்டிஎப்சி வங்கி வழங்கும் 25% தள்ளுபடியை பெறலாம். இந்த சலுகைகளை ஹெச்டிஎப்சியின் (டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் வேலிடிட்டி மார்ச் 31 ,2020) கார்டைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் Inox Movies tickets, Zomato foods, Bigbasket shopping உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதனைப் பெறுவதற்கு ஒரு சில விதிமுறைகளை வெளியிட்டது ஹெச்டிஎப்சி வங்கி.

HDFC

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதனைத் தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கியில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் "Zomato" வில் குறைந்தப்பட்சம் ரூபாய் 500 மதிப்பில் புக் செய்யப்படும் உணவுகளுக்கு 25% தள்ளுபடியையும் , Book My Show- வில் டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 50 வரை தள்ளுபடியும் , Bigbasket- யில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் குறைந்த பட்சமாக ரூபாய் 1500-க்கு பொருட்களை வாங்கினால் அவர்களுக்கு ஹெச்டிஎப்சியின் வழங்கும் தள்ளுபடி ரூபாய் 250 ஆகும். அதே போல் "INOX MOVIES" டிக்கெட்கள் குறைந்தது இரண்டு பெற்றுக்கொண்டால் தான் 25% தள்ளுபடியை பெற முடியும்.

HDFC BANK

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் மாதம் இருமுறை பரிவர்த்தனையை வங்கியில் மேற்கொள்பவராக இருக்க வேண்டும். அதே போல் படத்திற்கான டிக்கெட் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை மட்டும் இந்த சலுகைகளுடன் பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் எந்த ஒரு தனியார் வங்கியும் இத்தகைய சலுகைகளை வழங்காத நிலையில் ஹெச்டிஎப்சி வங்கி வழங்கியதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. அனைத்து விதமான தனது வங்கி வாடிக்கையாளர்களும் தள்ளுபடியை பெறும் வகையில் ஹெச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

hdfc bank India
இதையும் படியுங்கள்
Subscribe