Advertisment

ஹெச்சிஎல் நிறுவனத்தின் லாபம் ரூபாய் 2,550 கோடியாக உயர்ந்தது!

இந்திய ஐடி துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனத்தில் (HCL COMPANY) மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் ரூபாய் 2550 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் லாபம் 14% அதிகரித்துள்ளதாக ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் முந்தைய நிதியாண்டில் ரூபாய் 2230 கோடியாக இருந்தது. மேலும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருமானம் 21% அதிகரித்து ரூபாய் 15990 கோடியாக உள்ளது. வரும் நிதியாண்டில் 14% முதல் 16% வரை வருமானம் அதிகரிக்கும் என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

HCL

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கடந்த நிதி ஆண்டின் முழுமைக்குமான லாபம் 16% அதிகரித்து ரூபாய் 10120 கோடியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வருமானம் 19% அதிகரித்து ரூபாய் 60427 கோடியாக உள்ளது என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஹெச்சிஎல் நிறுவனம் (HCL IT COMPANY) தனது ஐடி நிறுவனத்தை அதிகரிக்கவும், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

India HCL IT
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe