வீர மரணமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த இராணுவ வீரருக்கு வீர் சக்ரா விருது!

k palani

வீர தீர செயல் புரிந்த இந்திய இராணுவவீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இரண்டாவது நாளாகஇன்று (23.11.2021) நடைபெற்றுவருகிறது. நேற்று பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா வழங்கப்பட்ட நிலையில்இன்று, கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீனவீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் வீர மரணம் அடைந்தவர்களுக்கும், சீன வீரர்களை எதிர்த்துப் போராடி காயமடைந்த வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில், சீன வீரர்களுடனானமோதலில் வீர மரணமடைந்த தமிழ்நாடு வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. பழனியின் மனைவி குடியரசுத் தலைவரிடமிருந்து இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார். இந்திய - சீனஇராணுவவீரர்களிடையே கடந்த ஆண்டு நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

இந்த மோதலைத் தொடர்ந்து, எல்லையில் அமைதியைமீட்டெடுக்க இருதரப்பும் தொடர்ந்துபேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

china India vir chakra award
இதையும் படியுங்கள்
Subscribe