“ஆபாச படம் பாக்க ஆர்.எஸ்.எஸ்-க்கு  போகணுமா?” - கேள்வி எழுப்பும் குமாரசாமி!

KUMARASWAMY

கர்நாடகாவின்முன்னாள் முதல்வர்குமாரசாமி. இவர்அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கடுமையாக விமர்சித்துவருகிறார். இதனையொட்டி மாநில பாஜக தலைவர் நளின் குமார் கடீல்,ஆர்.எஸ்.எஸ். ஷாகாவிற்கு வந்துசங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இதற்கு தற்போது பதிலளித்துள்ளகுமாரசாமி, ஆபாச படத்தைப் பார்க்க கற்றுக்கொள்ளத்தான் அங்கு செல்ல வேண்டுமாஎன கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பாகஅவர், "அவர்களின் (ஆர்எஸ்எஸ்) தோழமை எனக்கு வேண்டாம். ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் கற்பிக்கப்பட்டதை நாம் பார்க்கவில்லையா? சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போதுஆபாச படம் பார்ப்பது போன்றவற்றைத்தானே அங்கு கற்றுத்தருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் இது அவர்களுக்கு (பாஜகவுக்கு) போதிக்கப்படவில்லையா? இதைக் கற்றுக்கொள்ள நான் அங்கு செல்ல வேண்டுமா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மூன்று அமைச்சர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்போது ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. அதனை தற்போதுகுமாரசாமி குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்துள்ளார்.

H. D. Kumaraswamy
இதையும் படியுங்கள்
Subscribe