Advertisment

பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிட்டீர்களா? - தவறினால் நாளை முதல் அபராதம்!

pan card aadhar card link

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி தேதியாகும்.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் மத்திய அரசு, அதற்கான கால அவகாசத்தையும் பல்வேறு முறை நீட்டித்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், பின்னர் மார்ச் 31ம் தேதிவரை இந்தக் காலக்கெடுவானது நீட்டிக்கப்பட்டது.

Advertisment

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஆறாவது முறையாக நீட்டிக்கப்பட்ட இந்தக் காலக்கெடுவானது இன்றுடன் முடிவுக்கு வருவதால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி தேதியாகும். நாளை முதல் ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது

Advertisment

அதன்படி, ஏப்ரல் 1 க்கு பிறகு அடுத்தமூன்று மாதங்களுக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்தால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். இந்தக் காலக்கெடுவிற்குப் பிறகு இணைப்பதற்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்..

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

1. http://incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்.

2. அதில் பான், ஆதார் எண், ஆதாரில் உள்ள உங்களுடைய பெயர், கேப்ட்சா ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.

3. பின் Link Aadhar எனும் பட்டனை க்ளிக் செய்தால் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படும்.

4. ஏற்கெனவே உங்களுடைய பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அது குறித்த தகவலும் இங்கு வரும்.

aadhar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe