‘ஹாட்ரிக் வெற்றி’ - இஸ்ரோ பெருமிதம்

'Hatrick win' - ISRO proud

விண்ணுக்கு செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்று பூமிக்கும் என்று திரும்பும் ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற நிலையில் இறுதி மற்றும் மூன்றாம்கட்ட சோதனையும் வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில்ஏவுகணை தரையிறங்கும் பரிசோதனையில் மூன்றாவது மற்றும் இறுதி கட்டவெற்றியை இஸ்ரோ அடைந்தது. இது ஒரு ஹாட்ரிக் வெற்றி ஆகும். இந்த சோதனை இன்று (23.06.2024) காலை 07.10 மணியளவில் வெற்றியடைந்தது. ‘புஷ்பக்’ ஒரு துல்லியமான கிடைமட்ட தரையிறக்கத்தை செயல்படுத்தியது. சவாலான சூழ்நிலையில் மேம்பட்ட திறன்களை இந்த சோதனை காட்டுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜே. முத்துப்பாண்டியன் என்பவர் திட்ட இயக்குநராகவும், பி. கார்த்திக் என்பவர் ஏவுகணையின் இயக்குநராகவும் உள்ளனர். இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி குழுவினருக்கு இஸ்ரோ தலைவர் சோமநாத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் உன்னிகிருஷ்ணனும் இந்த குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ISRO Rocket somnath victory
இதையும் படியுங்கள்
Subscribe