திமுக தலைவர் கலைஞரின் மறைவையொட்டி உலகளவு ட்ரெண்டில் முதலிடத்தில் ‘கருணாநிதி’, ’ஆர்.ஐ.பி. கருணாநிதி’ என்ற ஹேஷ்டேக்குகள் உள்ளன.
அதே சமயத்தில் அவரது உடலை மெரினாவில் இருக்கும் அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு காரணங்களுக்காக அக்கோரிக்கையை ஏற்க முடியாதென்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து ட்விட்டரில் மெரினா ஃபார் கலைஞர் என்ற ஹேஷ்டேக்கு ட்ரெண்டாகி வருகிறது.