ஹரியானா மாநிலத்தின் பாஜக கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சவுத்ரி பிரேந்தர்சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1- ஆம் தேதி வரை பதவிக்காலம் உள்ள நிலையில் பதவியை துறந்துள்ளார். இவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார்.
பிரேந்தர் சிங் மகன் பிரிஜேந்திர சிங் ஹிசார் தொகுதி எம்.பியாக தேர்வான நிலையில் பதவி விலகியுள்ளார். இதனால் பாஜக கட்சித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.