Advertisment

உடல் எடையை குறைக்காத போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு

 Haryana government has announced that action will be taken against the police who do not lose weight

அசாம் மாநிலத்தில் போலீசார் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என அம்மாநில அம்மாநில அரசு அண்மையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. மேலும் அடுத்த வரும் 3 மாதங்களில் உடல் எடையை குறைக்காத போலீசாருக்கு விருப்ப ஓய்வு வழங்கவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இது அம்மாநில போலீசாரை கலக்கத்தில் ஆழ்த்திய நிலையில் தற்போது அசாமை தொடர்ந்து ஹரியானாஅரசும் இது போன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Advertisment

அந்த வகையில் உடல் எடை அதிகம் கொண்ட போலீசார் களப்பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமான ஒன்று. இந்த நடவடிக்கையின் மூலம் குற்றமல்லாதமாநிலமாக ஹரியானாவைமாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

govt police haryana
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe