ஹரியானா காங்கிரஸின் மூத்த தலைவரான விகாஷ் சவுத்ரி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இன்று காலை உடற்பயிற்சி மையத்திற்கு சென்றுவிட்டு தனது காரில் ஏறி அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சில மர்ம நபர்கள் அவர் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சுமார் 10 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், குண்டுகள் துளைத்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் அதற்குள்ளாகவே இறந்துள்ளார். அவரை சுட்டவர்கள் அங்கிருந்து தப்பித்த நிலையில் அவர்களை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவரது இறப்பு ஹரியானா காங்கிரஸுக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது இறப்பிற்கு காங்கிரஸ் சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளது.