Skip to main content

கரோனா உயிரிழப்பு - ஏழை குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்த ஹரியானா முதல்வர்!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

haryana cm

 

இந்தியாவில் இதுவரை இரண்டு கரோனா அலைகள் ஏற்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கரோனாவால் உயிரிழந்தவர்களின் இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இருப்பினும் மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கரோனாவால் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கண்டிப்பாக இழப்பீடு வழங்கவேண்டும் என கூறியதோடு, அதற்கான விதிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

இந்தநிலையில்  கரோனாவால் குடும்ப உறுப்பினரை இழந்த ஏழை குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். ஆண்டு வருமானம் 1.80 லட்சம் வரை உள்ள குடும்பங்கள், தங்களது குடும்ப உறுப்பினரை காரோனாவால் இழந்திருந்தால் இந்த இழப்பீடு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்