ஹரியானா மாநிலத்தில் உள்ள கரவுண்டாவில் உள்ள ஹர்சிங்புரா என்ற கிராமத்தில், 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு பள்ளத்தை தோண்டி சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த பகுதியில் பாறைகள் இல்லாத காரணத்தினால் எளிதில் சிறுமியை பத்திரமாக மீட்கப்படுவார் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Advertisment

haryana 5 year old girl falls into a deep well

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்கட்டுப்பட்டியில் இரண்டு வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் நீங்காத சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது ஒட்டுமொத்த மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.