/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfgdfgs.jpg)
பாடகர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, அவரது மகன் சரண் தினமும் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் எஸ்.பி.பி உடல்நலம் மீண்டு வருவதற்காக பல்வேறு பிரபலங்களும் பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்துவரும் நிலையில், எஸ்.பி.பி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "அனைவராலும் ரசிக்கப்படும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் தேறவும் நல்ல ஆரோக்கியம் பெறவும் நான் பிரார்த்திக்கிறேன்.கரோனாவுக்கு எதிராகக் களத்தில் நின்று பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் சமூகத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்ட போது, அவர்களின் மன உறுதியை ஊக்கப்படுத்தும் வகையில் இதயத்தைத் தொடும் பாடலை வீடியோவாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)