பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பவர். அந்த வகையில் தற்போது விசித்திரமான ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisment

அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பேருந்தில் ஒலிக்கும் ஹாரன் சத்தத்தை போன்று தன் வாயின் வழியாக அந்த ஒலியை தத்ரூபமாக எழுப்புகிறார். இதைபதிவிட்டுள்ள அவர் " இந்தியாவுக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு திறமைசாலி " என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.