சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது பிறப்பை போற்றும் விதமாக அவர் பிறந்த இடத்தில் சீக்கியர்களுக்கான குருத்வாரா ஒன்று கட்டப்பட்டுள்ளது.

Advertisment

harbhajan about nankana sahib issue

இதில் நேற்று நூற்றுக்கணக்கான யாத்திரீகர்கள் வழிபடு நடத்திக்கொண்டிருந்த போது, குருத்வாராவை முற்றுகையிட்ட ஒரு கும்பல் குருத்வாரா மீதும், அங்கிருந்த யாத்திரீகர்கள் மீதும் கற்களை கொண்டு தாக்கியுள்ளது. இதனால் வழிபாட்டிற்காக சென்ற சீக்கியர்கள் குருத்வாரா உள்ளேயே சிக்கிக்கொண்டு தவித்தனர்.

அப்பகுதியில் வாழும் முகமது ஹசன் என்பவர் சீக்கியப் பெண் ஜகித் என்பவரை அவரின் வீட்டில் இருந்து கடத்திச் சென்று இஸ்லாம் மதத்திற்கு மாற்றி கட்டாயத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக அந்தப் பெண்ணின் சகோதரர் மன்மோகன் சிங் காவல்துறையில் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த முகமது ஹசன், தனது சகோதரன் உட்பட அப்பகுதியில் வசிக்கும் மக்களுடன் வந்து குருத்வாராவை முற்றுகையிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சீக்கிய குருதுவாராவை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்படும் என்று ஹசன் கூறியதாக கூறப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், "சிலரால் அமைதியாகவே வாழ முடியாதா? அவர்களுக்கு என்ன ஆயிற்று என எனக்குத் தெரியவில்லை. முகமது ஹசன், ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாராவை இடித்துவிட்டு மசூதி கட்டுவேன் என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறார். இதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. கடவுள் ஒருவர்தான். அவரைப் பிரிக்காதீர். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பைப் பரப்பாதீர். முதலில் மனிதர்களாக வாழ்வோம், ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிப்போம். குருதுவாராவை இடித்துவிட்டு மசூதி கட்டுவோம் என்று முகமது ஹசன் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருப்பது குறித்து பிரதமர் இம்ரான் கான் கவனிக்க வேண்டும். அங்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.