Skip to main content

“பின்வாங்கிய மோடி” ...வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து சுப்பிரமணியன் சுவாமி அதிரடி கருத்து!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

subramanian swamy

 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.11.2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு எழுந்துள்ள அதேசமயம், அடுத்து நடைபெறவுள்ள பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில தேர்தல்களை மனதில் வைத்தே இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

 

இந்தநிலையில் பாஜக மாநிலங்களவை எம்.பி சுப்ரமணியண் சுவாமி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக பாஜக பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த ஓராண்டு காலமாக வெயிலிலும், கடும் குளிரிலும் அமைதியாகச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளின் துயர், மோடி பின்வாங்கியுள்ளதால் முடிவுக்கு வந்துள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் பிரதமரைப் பின்வாங்கக்கோரி தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாததற்கு பாஜக பிராயச்சித்தம் செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

 

அதேபோல் இன்னொரு ட்விட்டில், "இந்துக் கோவில்களின் சுதந்திரத்தை அபகரிப்பதில் இருந்து பின்வாங்க வேண்டுமெனப் பிரதமர் மோடி, உத்தரகாண்ட் பாஜகவிடம் கூற வேண்டிய நேரம் இது. கோவில்கள் கையகப்படுத்தப்பட்டது அப்பட்டமான சட்டவிரோதம். மேலும் அது பாஜகவிற்கு அவமானம்" என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

 

அதனைத்தொடர்ந்து தனது இன்னொரு ட்விட்டில் சுப்பிரமணியன் சுவாமி, "நமது நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை இப்போதாவது மோடி ஒப்புக் கொள்வாரா?. சீனாவின் வசம் உள்ள ஒவ்வொரு அங்குலத்தையும் திரும்பப் பெற மோடியும் அவரது அரசும் பாடுபடுமா?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Puri Jagannath temple treasure room opening

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாகச் சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் முன்பு ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாகப் பரப்புரை செய்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று (14.07.2024) பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து பூரி மாவட்ட ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பொக்கிஷ அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதே சமயம் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை (15.07.2024) தொடங்க உள்ளது. முன்னதாக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
7 state by-election setback for the BJP alliance

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்தை தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் 31,151 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 11,483 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 13 தொகுதிகளில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதேபோன்று இமாசல பிரதேசத்தில் 3 தொகுதிகளிலும், உத்தராகண்டில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் 1 தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் வகிக்கிறது. ஆனால், 7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.