Advertisment

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை தூக்கிலிடுங்கள்! - உன்னாவ் சிறுமி வேண்டுகோள்

தன்னை பாலியல் வன்புணர்வு செய்த பாஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை தூக்கிலிட வேண்டும் என பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

unnao

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்க குற்றவாளி என சி.பி.ஐ. விசாரணையில் உறுதியாகியுள்ளது.

சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்மீதான வழக்கை கிடப்பில் போட உள்ளூர் காவல்துறையினரைப் பயன்படுத்தியது, முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் இருந்து தப்பியது, சிறுமி தரப்பு ஆதாரங்களை மிரட்டியது மற்றும் மறைத்தது ஏராளமான என உண்மைகள் வெளிவந்தன.

Advertisment

இந்நிலையில், பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி, ‘என்னை பாலியல் வன்புணர்வு செய்ததற்காகவும், என் தந்தை மரணத்திற்கு காரணமாக இருந்ததற்காகவும் குற்றவாளியான குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது மகனை தூக்கிலிடவேண்டும். எங்கள் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே, எங்களால் நீதிமன்றத்தில் பயமின்றி பதிலளிக்கமுடியும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

yogi adithyanath Kuldeep singh uttarpradesh unnao
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe