hereover Hand voting instead of secret ballot Chandigarh municipal election
இனி ரகசிய வாக்கெடுப்புக்கு பதிலாக கை வாக்கு மூலம், சண்டிகர் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசிய வாக்கெடுப்பு முறைக்குப் பதிலாக கைகளை உயர்த்துவதன் மூலம் சண்டிகர் மேயர், மூத்த துணை மேயர், மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியுமான குலாப் சந்த் கட்டாரியா அறிவித்துள்ளார். சண்டிகர் நகராட்சி விதிமுறைகள் 1996இன் ஒழுங்குமுறை 6இல் திருத்தம் ஒன்றை குலாப் சந்த் கட்டாரியா அங்கீகரித்தன் மூலம், சண்டிகர் நகராட்சி நிர்வாகிகள் ரகசிய வாக்கெடுப்பு முறைக்குப் பதிலாக கையை உயர்த்துவன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குலாப் சந்த் கட்டாரியா கூறுகையில், “புதிய முறை தேர்தல் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்கை மேலும் தெளிவாகவும் பொறுப்புணர்வுடனும் மாற்றும். இந்த மாற்றம் நகராட்சியின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தவும், ஜனநாயக செயல்முறைகளில் நம்பிக்கையை வேலும் வலுப்படுத்தவும் உதவும்” என்று கூறினார்.
கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் சண்டிகர் மேயர், மூத்த மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்களுக்கான நடைபெற்ற தேர்தலின் போது, 36 ஓட்டுகளில் 16 ஓட்டுகள் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் பேனாவைக் கொண்டு எழுதும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us