Skip to main content

எனது தாயை இழந்துவிட்டேன்- சுஷ்மா ஸ்வராஜ் குறித்து ஹமீது அன்சாரி உருக்கம்...

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

பாஜக வின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு காலமானார்.

 

hameed ansari about sushma swaraj

 

 

இந்நிலையில் காதலியை தேடி சென்று பாகிஸ்தான் நாட்டில் சிக்கியிருந்து, பின்னர் சுஷ்மா ஸ்வராஜின் முயற்சியால் மீட்கப்பட்ட இளைஞரான ஹமீது அன்சாரி, சுஷ்மாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "சுஷ்மா ஸ்வராஜ் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நான் நாடு திரும்புவதற்காக அவர் செய்த முயற்சிகள் மிகப்பெரியது. அவர் எனக்கு தாய் போன்றவர். நான் பாகிஸ்தானில் இருந்து திரும்பிய பின்னர் எனக்கு நல்லமுறையில் வழிகாட்டினார். என் வாழ்கையில் இனி என்ன செய்ய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். அவரது மரணம் எனக்கு மிகப்பெரிய பேரிழப்பு. எனது தாயை இழந்தது போன்று உணர்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்... நெகிழ்ச்சி தருணம்...

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

பாஜக வின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு காலமானார்.

 

sushma swarajs daughter fulfils her last wish

 

 

இறப்பதற்கு முன்பாக அவர் போனில் கடைசியாக வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உடன் பேசியுள்ளார். பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை வீரரான குல்புஷன் ஜாதவுக்காக அண்மையில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி தேடி தந்தவர் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே. அந்த வழக்கில் வாதாடுவதற்காக பேசிய ஊதியமாக ஒரு ரூபாயை அடுத்த நாள் மாலை வந்து வாங்கிக்கொள்ளும்படி சுஷ்மா அவரிடம் பேசியுள்ளார்.

அது ஒரு உணர்ச்சிகரமான உரையாடலாக இருந்ததாகவும், மேலும் அழைப்பை துண்டித்த 10 நிமிடங்களில் அவருக்கு மாரடைப்பு வந்தாகவும் ஹரிஷ் சால்வே உருக்கமாக கூறினார். இதுவே சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையாக இருந்த நிலையில், தற்போது அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார் அவரது மகள்.

நேற்று வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிற்கு அவருடைய கட்டணமான ஒரு ரூபாய் நாணயத்தை சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி கொடுத்தார். இதனை சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கௌசல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,“சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை பன்சூரி நிறைவேற்றியுள்ளார். அவர் ஹரிஷ் சால்வேயை அழைத்து குல்பூஷண் ஜாதவ் வழக்கிற்கான அவருடைய கட்டணமான ஒரு ரூபாயை அளித்தார்” எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

Next Story

பா.ஜ.க.வுக்கு தொடரும் இழப்பு!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

முன்னாள் நிதியமைச்சரும் "ஜென்டில்மேன்' இமேஜ் கொண்டவருமான அருண்ஜெட்லி கடந்த ஆகஸ்டு 24-ஆம் தேதி மரணமடைந்தார். தனிப்பட்ட முறையில் இந்திய உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் ஆவார். கடந்த பா.ஜ.க. ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும்போதே அருண்ஜெட்லிக்கு சிறுநீரகக் கோளாறு, திசுப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. அமெரிக்க சிகிச்சை, ஓய்வு என காலம்தள்ளி வந்த அவர், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தார். 
 

bjp



தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர், நிதியமைச்சர், கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் என பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்புகள் பல வகித்தவர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.விடமும், தற்போது சி.பி.ஐ.யால் வேட்டையாடப்படும் காங்கிரஸ் பெருந்தலையான ப.சிதம்பரத்திடமும் கட்சி தாண்டிய நட்பைப் பேணியவர். ஏற்கெனவே மனோகர் சிங் பாரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ் என ஆளுமைகளை இழந்து தவிக்கும் பா.ஜ.க.வுக்கு இது மற்றுமொரு பேரிழப்பாகும்.