Advertisment

ஞானவாபி மசூதியில் தடயவியல் பரிசோதனை செய்ய இடைக்காலத் தடை; உச்சநீதிமன்றம் அதிரடி

gyanvapi mosque supreme court judgment forensic carbon dating related research

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. இங்குஇந்து மத கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்க தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கோரி நான்கு பேர் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Advertisment

அதைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத்உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மசூதி வளாகத்தில் தடயவியல் சோதனை மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்ததீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றஉத்தரவுக்குத்தடை விதிக்கக் கோரி ஞானவாபி மசூதியை மேற்பார்வை செய்து வந்த அமைப்பு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Advertisment

இந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் சோதனை நடத்தலாம் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Delhi allahabad mosque Varanasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe