Advertisment

அன்று நேருக்கு நேர் நிற்கவைத்த மதம்... இன்று அருகருகே அமரவைத்த மனிதம்! 

குஜராத்தில் கோத்ரா கலவரத்தில் எதிரும் புதிருமாய்நேருக்கு நேர் எதிரியாக பார்த்துக்கொண்ட இருவர் தற்போது மதங்களையும், சச்சரவுகளையும் மறந்து நண்பர்களாக இணைந்துள்ளது அனைவர் நெஞ்சத்தையும் உருக்குவதாக உள்ளது.

Advertisment

The Religion That Was Face to Face...humanity, who was sitting nearby today...

அயோத்தியிலிருந்து சபர்மதி விரைவு ரயிலில் திரும்பிக்கொண்டிருத்த கரசேவகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட குஜராத் கலவரத்தின் சுவடுகளை அவ்வளவுஎளிதில்எல்லோராலும் மறந்திருக்கமுடியாது. 2002 ஆம் ஆண்டுஇரு மதத்தினரும் கொலைவெறியுடன் தாக்கிக்கொண்ட குஜராத் கோத்ரா கலவரசம்பவம் நாட்டையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று.

இந்த கலவரத்தை அமைதிப்படுத்த அப்போது குராஜாத்தின் முதல்வராக இருந்த மோடி அரசு தவறிவிட்டதாக அரசின்மீதும், மோடி மீதும்விமர்சனங்கள் இருந்தது. அந்த கலவரத்தில் காவி நிற தலைப்பட்டையுடன் கையில் நீண்ட வாளுடன் கண்ணில் கொலைவெறி ததும்ப நின்ற இளைஞரும்,அவரிடம் தன்னை கொல்லவேண்டாம் என கண்ணில் நீர் வழிய கைகூப்பி நின்ற இஸ்லாமிய இளைஞரின் புகைப்படமுமேஒற்றைவரியில் மொத்த கலவரத்தின் தீவிரத்தை விளக்கிவிடும், அப்படியொருஉச்சகட்டத்தை தொட்டிருந்தது கோத்ரா கலவரம்.

Advertisment

The Religion That Was Face to Face...humanity, who was sitting nearby today...

அதற்கு மாறாக தற்போது அந்த புகைப்படத்தில் நேருக்குநேர் எதிராக நின்றஇருவரும் மதங்களை தாண்டி மனிதம் பெற்று நல்ல நண்பர்களாக வலம் வருகின்றனர் என்பதுதான் இன்று நாட்டையேஆச்சர்யத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ளசெய்தி.

The Religion That Was Face to Face...humanity, who was sitting nearby today...

The Religion That Was Face to Face...humanity, who was sitting nearby today...

கலவரத்தில் காவி நிற தலைப்பட்டையுடன்கையில் வாள் ஏந்திகொலைவெறியுடன் நின்ற இளைஞரின் பெயர் அசோக் மோர்ஜி. தற்போது இவர் ஒரு காலணி கடையை அமைத்திருக்கிறார்.அந்த கடையை என்னைக்கொல்லவேண்டாம் என கெஞ்சியகுத்புதீன் அன்சாரியேதிறந்து வைத்திருக்கிறார். அவருடன் கைகுலுக்கி புன்முறுவல் பூக்க தட்டிக்கொடுத்து அருகருகே நின்று நட்பு பாராட்டிக்கொள்வதுமான புகைப்படங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு மதத்தை தாண்டியதுமனிதம் என்பதையும் உணர்த்தியுள்ளது.

friends modi riot Gujarath humanity gone.
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe