Skip to main content

அன்று நேருக்கு நேர் நிற்கவைத்த மதம்... இன்று அருகருகே அமரவைத்த மனிதம்! 

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

குஜராத்தில் கோத்ரா கலவரத்தில் எதிரும் புதிருமாய் நேருக்கு நேர் எதிரியாக பார்த்துக்கொண்ட இருவர் தற்போது மதங்களையும், சச்சரவுகளையும் மறந்து நண்பர்களாக இணைந்துள்ளது அனைவர் நெஞ்சத்தையும் உருக்குவதாக உள்ளது.

 

The Religion That Was Face to Face...humanity, who was sitting nearby today...


அயோத்தியிலிருந்து சபர்மதி விரைவு ரயிலில் திரும்பிக்கொண்டிருத்த கரசேவகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட குஜராத் கலவரத்தின் சுவடுகளை அவ்வளவு எளிதில் எல்லோராலும் மறந்திருக்க முடியாது. 2002 ஆம் ஆண்டு இரு மதத்தினரும் கொலைவெறியுடன் தாக்கிக்கொண்ட குஜராத் கோத்ரா கலவர சம்பவம் நாட்டையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று.

இந்த கலவரத்தை அமைதிப்படுத்த அப்போது குராஜாத்தின் முதல்வராக இருந்த மோடி அரசு தவறிவிட்டதாக அரசின்மீதும், மோடி மீதும் விமர்சனங்கள் இருந்தது. அந்த கலவரத்தில் காவி நிற தலைப்பட்டையுடன் கையில் நீண்ட வாளுடன் கண்ணில் கொலைவெறி ததும்ப நின்ற இளைஞரும், அவரிடம் தன்னை கொல்லவேண்டாம் என கண்ணில் நீர் வழிய கைகூப்பி நின்ற இஸ்லாமிய இளைஞரின் புகைப்படமுமே ஒற்றை வரியில் மொத்த கலவரத்தின் தீவிரத்தை விளக்கிவிடும், அப்படியொரு உச்சகட்டத்தை தொட்டிருந்தது கோத்ரா கலவரம்.

 

The Religion That Was Face to Face...humanity, who was sitting nearby today...


அதற்கு மாறாக தற்போது அந்த புகைப்படத்தில் நேருக்கு நேர் எதிராக நின்ற இருவரும் மதங்களை தாண்டி மனிதம் பெற்று நல்ல நண்பர்களாக வலம் வருகின்றனர் என்பதுதான் இன்று நாட்டையே ஆச்சர்யத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ள செய்தி.

 

The Religion That Was Face to Face...humanity, who was sitting nearby today...

 

The Religion That Was Face to Face...humanity, who was sitting nearby today...

 

கலவரத்தில் காவி நிற தலைப்பட்டையுடன் கையில் வாள் ஏந்தி கொலைவெறியுடன் நின்ற இளைஞரின் பெயர் அசோக் மோர்ஜி. தற்போது இவர் ஒரு காலணி கடையை அமைத்திருக்கிறார். அந்த கடையை என்னைக்கொல்லவேண்டாம் என கெஞ்சிய குத்புதீன் அன்சாரியே திறந்து வைத்திருக்கிறார். அவருடன் கைகுலுக்கி புன்முறுவல் பூக்க தட்டிக்கொடுத்து அருகருகே நின்று நட்பு பாராட்டிக்கொள்வதுமான புகைப்படங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு மதத்தை தாண்டியது மனிதம் என்பதையும் உணர்த்தியுள்ளது.     

 

 

 

   

 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார்.