ராஜஸ்தான் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் அங்குள்ள ரயில் தண்டவாளங்களில் டென்ட் அமைத்து தங்கி ரயில்களை மறுத்துள்ளனர். கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ராஜஸ்தான் மாநில அரசு 21 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்த்தியது. அதில் ஒரு சதவீதம் மட்டுமே குஜ்ஜார் இனத்திற்காக ஒதுக்கப்பட்டது. இதனை 5 சதவீதமாக உயர்த்த கோரி அந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத ஒரு பகுதியாக அம்மாநில மக்கள் அங்குள்ள ரயில்வே வழித்தடங்களில் டென்ட் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதி வழியே செல்லும் 4 ரயில்கள் வேறு வழியில் மாற்றி விடப்பட்டன. அதனை தொடர்ந்து மீதமுள்ள 14 ரயில்களும் கேன்சல் செய்யப்பட்டன. வழக்கமாக ஓரிரு டென்டுகள் போட்டு பின்னர் அதனை அகற்றி விடுவார்கள். ஆனால் இந்த முறை ஏகப்பட்ட டென்டுகள் போடப்பட்டு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.இதனால் அங்கு ரயில்வே துறையே முடங்கியுள்ளது. இந்நிலையில் போராட்டம் இன்னும் தொடர்ந்து வருவதால் இயல்பு நிலை எப்போது திரும்பும் என தெரியாத நிலையில் அங்குள்ள அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
புது ஸ்டைலில் போராட்டம்; ரயில்வே துறையை முடக்கிய மக்கள்...
Advertisment