ADVERTISEMENT

கரோனாவை விரட்ட குஜராத்தில் பிரபலமாகும் மாட்டு சாண குளியல்-மருத்துவர்கள் எச்சரிக்கை!! 

06:50 PM May 11, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்பு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது கரோனா.

இந்நிலையில் குஜராத்தில் மாட்டு சாணத்தில் குளிக்கும் மூட நம்பிக்கை பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலரும் மாட்டுச்சாணம் குளியல் எடுத்து வருகின்றனர். இப்படி செய்வதால் வேறுவிதமான சுகாதார தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு மாட்டு கொட்டகைக்கு வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சிலர் கூட்டமாக வருகிறார்கள். மாட்டுச் சாணத்தை கரைத்து உடல் முழுவதும் பூசிக் கொள்ளும் இவர்கள் மாட்டுப் பாலை மேலே ஊற்றி குளியல் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் கரோனா வைரஸ் தங்களை தாக்காது என்று இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படி மாட்டுச்சாண குளியல் எடுத்துக் கொள்பவர்களில் சிலர் மருந்து நிறுவனங்களில் வேலை செய்பவர்களாகவும், சிலர் மருத்துவர்களாகவும் உள்ளனர் என்பதுதான் பெரும் அதிர்ச்சியே. ஆனால் இதுபோன்று மாட்டுச் சாணத்தால் குளிப்பதால் கரோனாவை விரட்டலாம் என்பதுபோன்ற எந்த அறிவியல் பூர்வமான நிரூபணமும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் வேறுவிதமான தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT