gujarat

Advertisment

தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகையை பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் வடோதராவைச் சேர்ந்த 26 வயது வாலிபர் சுபம் மிஸ்ரா. இவர், அஜ்ரிமா ஜோசுவா என்ற நடிகை மீது பாலியல் அவதூறுகளைக் கூறி,அவரை பலாத்காரம் செய்யப் போவதாகவீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோ பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் எழுந்தவுடன் சுபம் மிஸ்ரா தான் வெளியிட்ட வீடியோவை நீக்கிவிட்டார். மேலும்,இந்தச் செயலுக்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.