Advertisment

குஜராத்தில் மாயமான பெண்கள்; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவர அறிக்கை

gujarat state missing women recent released data national records bureau ncrb

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்மாயமானது குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இந்த அமைப்பானது 1986 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த அமைப்பானது குற்றம் சார்ந்த புள்ளிவிவரங்கள்மற்றும் அறிக்கைகளைதேசிய மற்றும் மாநில அளவில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் இந்த அமைப்புவெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாகஅதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வெளியான அந்த அறிக்கையில், "2016 ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 105 பெண்களும், 2017 ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 712 பெண்களும்,2018ஆம் ஆண்டு9ஆயிரத்து246 பெண்களும்,2019ஆம் ஆண்டு9ஆயிரத்து268 பெண்களும், 2020ஆம் ஆண்டு8ஆயிரத்து290 பெண்களும்என மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Women missing amithshah Gujarath
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe