குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில், நேற்று நடந்த ஒரு கோவில் விழாவில்நாட்டுப்புறப் பாடல் கச்சேரி நடத்தப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பாடலை பாடிய பாடகரின் மீதும் மேடையில் இருக்கும் இசைக் குழுவினர்கள் மீதும் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து மேலே மழை போன்று பொழிந்துள்ளனர்.
அப்போது அங்கே பணம் வீசிய இருவர் நரேந்திர மோடியை போன்றே முகமூடி வைத்து லட்சக்கணக்கில் இருக்கும் 500 மற்றும் 100 ரூபாய் பணங்களை அள்ளி விசீயுள்ளனர். அவர்கள் எதற்காக மோடியை போன்று முகமூடி அணிந்தார்கள் என்று தெரியவில்லை. இதேபோன்று வாதோராவிலும் ஒரு கோவில் நிகழ்ச்சியில் பஜனை பாடிய பெண்ணின் மீதும் லட்சக்கணக்கில் பணம் மழை போன்று வீசப்பட்டுள்ளனர். வீசப்பட்ட பணத்தின் மதிப்புசுமார் 50 லட்சம் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/QS8WI1C8S_4.jpg?itok=F_FPNw1l","video_url":"