குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கரோனாவிற்குசிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ‘ஷ்ரே’ என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
அகமதாபாத்,நவ்ரங்கபுராவில் உள்ள அந்த மருத்துவமனையில்பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வரபணியில் தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள், நடவடிக்கைகள் குறித்துவிசாரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்த விபத்தில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.