/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/GujaratCase-in.jpg)
குஜராத்தில் காவலர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெறவிருந்த நிலையில் வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்தது. இதனால் தேர்வு தொடங்குவதற்கு சற்று நேரம் முன்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்விற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன, 8.75 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு நடைபெறும் நாள் காலையில் சமூக வலைதளங்களில் தேர்விற்கான வினாத்தாள் வெளியானதால் தேர்வுத்துறை அதிகாரிகள் தேர்வை ரத்து செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், இந்த வழக்கு தொடர்பாக 3 நபர்களை கைது செய்தனர். அவர்களில் இருவர் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)