நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், அசாம், பீகார், கேரளா, உத்தரகாண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அதே போல் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 250- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

Gujarat police constable carried two children on his shoulders for over 1.5 km in flood waters

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பிருதிவிராஜ் ஜடேஜா, மோர்பி மாவட்டத்தின் கல்யாண்பார் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட இரண்டு குழந்தைகளை 1.5 கி.மீ தூரத்திற்கு வெள்ள நீரில் குழந்தைகளை தன் தோள்களில் சுமந்தவாறு நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உயிரை பணயம் வைத்து இரு குழந்தைகளை காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளுக்கு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.