Advertisment

சிறுநீர் கழிக்க சென்ற முதியவரை கொடூரமாக தாக்கிய சிங்கம்!

குஜராத் மாநிலம் மற்ற மாநிலங்களை விட காடுகள் அதிகம் இருக்கும் ஒரு மாநிலம். குஜராத்தில் 10க்கும் மேற்பட்ட வன விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. அந்த வகையில் மாநிலத்தில் புகழ் பெற்ற வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்று கிர் வனவிலங்கு சரணாலயம். இந்நிலையில், அந்த சரணாலயத்துக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் சிங்கம் தாக்கி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இன்று அதிகாலை சிறுநீர் கழிப்பதற்காக அதிகாலை 4 மணி அளவில் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு முதியவர் சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் மறைந்திருந்த சிங்கம் அவரை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

lion
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe