குஜராத் மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வாகனத்தை நிறுத்துவதற்கனா "பார்க்கிங் கட்டணம்" வசூலிக்கக்கூடாது என அம்மாநில போக்குவரத்து துறையினர் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து வணிக நிறுவனங்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற தனி நீதிபதி போக்குவரத்து துறையினர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும், வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் குறைந்த அளவு கட்டணத்தை வசூலிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

GUJARAT HIGH COURT ORDER MALLS , MULTIPLEXES CANNOT BE PARKING FEE

Advertisment

Advertisment

இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆனந்த் தேவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதில் குஜராத் மாநில ஒருங்கிணைந்த பொது வளர்ச்சி விதிமுறைகளின் கீழ், வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் "பார்க்கிங் கட்டணம்" வசூலிக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த தீர்ப்பில் பெரு வணிக வளாகங்கள், திரையரங்குகள் உட்பட எந்த நிறுவனங்களும் வாகனத்தை நிறுத்துவதற்கனா "பார்க்கிங் கட்டணம்" வசூலிக்கக்கூடாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.