gujarat government renames dragon fruit as kamalam

சீனாவுடன் தொடர்புடைய பெயர் எனக் கூறி டிராகன் ஃப்ரூட்டின் பெயரை மாற்றியுள்ளது குஜராத் அரசு.

Advertisment

புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய டிராகன் ஃப்ரூட் பழம் தென் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுதவிர, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இப்பழம் அதிகம் விளைவிக்கப்பட்டு வருகின்றன. அண்மைக் காலங்களில் அதிகம் பிரபலமாகிவரும் இந்தப் பழத்தின் பெயரை குஜராத் அரசு மாற்றியுள்ளது.

Advertisment

இதுகுறித்து பேசியுள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, "டிராகன் பழத்தின் பெயரை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பழத்தின் பெயர் சீனாவுடன் தொடர்புடையதாக இருப்பதால் அதன் பெயரை நாங்கள் மாற்றியுள்ளோம். இந்தப் பழம் தாமரை வடிவில் இருப்பதால், இதற்கு ‘கமலம்’என்று மறுபெயரிடப்பட உள்ளது. குஜராத் அரசாங்கம் இந்தப் பழத்தின் மறுபெயருக்குக் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். பாஜகவின் சின்னமான தாமரையின் சமஸ்கிருத பெயரான கமலம் என்பதைப் பழத்திற்குச் சூட்டியுள்ளது சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் நகரங்களின் பெயர்களை மாற்றுவதில் ஆர்வம் காட்டிவந்த பாஜக அரசு, தற்போதுபழங்களின் பெயர்களை மாற்றுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.