ADVERTISEMENT

குஜராத் கலவர வழக்கு; முன்னாள் அமைச்சர் உட்பட 67 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்!

03:28 PM Apr 21, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் 1700 பேர் அயோத்திக்கு ஆன்மீக பயணம் சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து அகமதாபாத் திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது, அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலானது குஜராத் மாநிலம் கோத்ரா ஸ்டேஷனுக்கு வந்து நின்றபோது கரசேவகர்கள் இருந்த ரயில் பெட்டி அருகே சிலர் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பியபடி இருந்தபோது கரசேவகர்கள் பயணித்த எஸ்6 பெட்டியில் திடீரென நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. தீ வேகமாக அடுத்தடுத்த பெட்டிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது. இந்த நெருப்பில் சிக்கிக் கொண்ட பொதுமக்களும், கரசேவகர்களும் வெளியே வரமுடியாமல் அலறித் துடித்தார்கள். இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என மொத்தம் 59 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்துக்கு மறுநாள் வடக்கு அகமதாபாத்தில் உள்ள நரோதா பாட்டியா கிராமத்தில் வசித்து வந்த 11 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். நரோதா பாட்டியா வழக்கில், பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த மாயா கோட்னானி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 86 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கானது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே 18 பேர் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் ஏற்கனவே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 67 பேரையும் விடுதலை செய்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT